நூற்றுக்கணக்கான மாணவர்கள் செவ்வாய்க்கிழமை இந்தியாவின் நுழைவுவாயில் பகுதியில் மறியல் போராட்டம் நடத்தினர்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 மாணவர்களை மைதானத்துக்கு அழைத்துச்சென்ற போலீசார் அவர்கள் அனைவரைப் பற்றிய விவரங்களையும் வற்புறுத்திப் பெற்றுள்ளனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜேஎன்யூவில் முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொடூரமாகத் தாக்கியது. இத்தாக்குதலைக் கண்டித்து மும்பையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் செவ்வாய்க்கிழமை இந்தியாவின் நுழைவுவாயில் பகுதியில் மறியல் போராட்டம் நடத்தினர்.

மும்பை போலீசார் இவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி ஆசாத் மைதானத்துக்கு அழைத்துச்சென்று, ஒவ்வொருவரிடமும் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கட்டாயப்படுத்திப் பெற்றுள்ளனர்.